Inauguration of ‘Kaandhal Tamil Mandram’ (fhe;js; jkpo; kd;wk;) on 14.08.2023. Dr.A. Manavazhagan, Associate Professor, Sociology Arts and Culture Field, World Tamil Research Institute delivered a lecture on “jkpoh; ehfhpfKk; tho;tpaYk;”.
Student Achievements
மாணவர்கள் பங்கு ககாண்ட நிகழ்வுகள் & ப ோட்டிகள்2022-2023
2021-2022
தருமமூர்த்தி இராவ்பகதூர் கலவல கண்ணன் செட்டி இந்துக் கல்லூரி (சுழற்சி – 1)
தமிழ்த்துறை நிகழ்வுகள் 2022 – 2023
1. காந்தள் – தமிழ் மன்றத் தொடக்கவிழா நாள்: 12.09.2022
தரும மூர்த்தி இராவ் பகதூர் கலவல கண்ணன் செட்டி இந்துக் கல்லூரி, தமிழ் துறை (சுழற்சி -1) சார்பாக 12.09.2022 அன்று காந்தள் தமிழ் மன்றத் தொடக்க விழா நடைபெற்றது. நமது கல்லூரி முதல்வர் முனைவர் க.கல்விக்கரசி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் காயிதே மில்லத் ஆடவர் கல்லூரி, தமிழ்த்துறைத் தலைவர், முனைவர் ஜெ.ஹாஜாகனி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அவர், நமது நிறுவனர், மற்றும் நிறுவனத்தின் அறச் செயல்களைப் பெருமையுடன் குறிப்பிட்டு வாழ்த்தியதோடு தமிழ்ச் சமூகத்தின் அற மரபைச் சான்றுகளுடன் விளக்கினார். சங்கப் புலவர்களில் தொடங்கி வள்ளுவர், சாத்தனார், கம்பர், திருமூலர், வள்ளலார், தாயுமானவர், பாரதி, தமிழன்பன், புலமைப்பித்தன், இன்குலாப்,அப்துல் ரகுமான், மீ.ரா, வைரமுத்து, யுகபாரதி வரையிலான பலரது கவிதைகளை மேற்கோள் காட்டி நிகழ்த்தப்பட்ட அவரது சிறப்புரை,மாணவர்களிடையே அறச் சிந்தனையை தூண்டும் வகையிலும் சமூக அக்கறையை ஊட்டும் வகையிலும் அமைந்திருந்தது.இது போன்ற இலக்கிய கூட்டங்கள் வழியாக மாணவர்கள் கேட்கும் கருத்துகள் சமூகம் சார்ந்த அவர்களின் செயல்களில் வெளிப்பட வேண்டும் என்ற அக்கறையில், “ மாணவர்கள் கூடிக் கலைகின்ற காகங்கள் அல்ல கூடிப் பொழிகின்ற மேகங்கள்” என அவர் குறிப்பிட்டு பேசியது மாணவர்களை வெகுவாகக் கவர்ந்தது.
நிகழ்வு(1) தொடர்பான புகைப்படங்கள்
பாரதி விழா
தமிழ்த்துறை காந்தள் தமிழ் மன்றம் சார்பில் பாரதி விழா 14.09.2022 அன்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தமிழருவி மணியன் ஐயா அவர்கள், பாரதியின் நிறைவேறாத கனவுகள் எனும் தலைப்பில் உரையாற்றினார். பாரதியின் வாழ்வில் நடைபெற்ற சுவையான நிகழ்ச்சிகளைப் பதிவு செய்ததோடு, பாட்டுக்கொரு புலவன் பாரதியின் அருமை பெருமைகளை அவர் கவிதை வரிகளின் வழியாக எடுத்துரைத்தார். மாணவர்களின் வாழ்வில் பல ஆக்க செயல்களைப் புரிந்திட ஊக்கம் அளிக்கும் வகையில் அமைந்திருந்தது அவரது உரை. பாரதியாரின் வந்தே மாதரம் பாடலைக் குறித்த வரலாற்றைச் சுவைபட பதிவு செய்தார். பெண்களுக்குப் பாரதியார் வகுத்த பத்து கட்டளைகள் குறித்து எடுத்துரைத்து மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பாரதியாரோடு தொடர்பு கொண்ட சுப்பிரமணிய சிவா குறித்த செய்திகளையும் பகிர்ந்து கொண்டார். பெண்ணியம் சமூகம், அரசியல், பொருளாதாரம் போன்ற அனைத்திலும் முழுமை பெறாத பாரதத்தின் நிறைவு பெறாத< கனவுகள் இன்னமும் இழையோடி கொண்டிருக்கிறது. பாரதியின் கனவு மெய்ப்பட வேண்டும் அதற்கு நாளைய தலைமுறையான மாணவர்கள் கரம் கோர்க்க வேண்டும் என்ற அவாவோடு உரையை நிறைவு செய்தார். இவ்விழாவினை முன்னிட்டு அனைத்துத் துறை மாணவர்களுக்கிடையில் கவிதை, கட்டுரை, பேச்சு, பாட்டு, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குச் சிறப்பு விருந்தினர் பரிசுகளை வழங்கி வாழ்த்தினார். அதிக புள்ளிகளைப் பெற்ற வணிகசெயலாண்மைவியல் துறை மாணவர்களுக்குச் சுழற்கேடயம் வழங்கப்பட்டது.
கணித்தமிழ்ப் பேரவை – ஒரு நாள் பயிலரங்கம் நாள்: 22.02.2023
நமது கல்லூரி தமிழ்த்துறை, கணித்தமிழ்ப் பேரவை சார்பில் மாணவர்களுக்கு கணினியைத் தமிழில் முற்றிலுமாக பயன்படுத்தும் நோக்கிலும் இணையத் தமிழை வளர்த்தெடுக்கும் நோக்கிலும் 22.02.2023 அன்று ஒரு நாள் பயிலரங்கினை நடத்தியது. பயிலரங்கத்தின் முதல் அமர்வில், இணைய வல்லுநர் திரு. கலீல் ஜாகீர், விஜிஎல்யுஜி(VGLUG) அமைப்பாளர், "கட்டற்ற மென்பொருள் நிறுவல், பரவலாக்கல், விழிப்புணர்வு" என்னும் பொருண்மையில் பயிற்றுவித்தார். கட்டற்ற மென்பொருள் அறிமுகம் குறித்தும் அவசியம் குறித்தும் விளக்கினார். இணையத்தில் உளவு, கண்காணிப்பு, டிஜிட்டல் தடம், தனிமனித பாதுகாப்பு, பெண் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பயிலரங்கத்தின் இரண்டாம் அமர்வில், கணினி வல்லுநர் திரு. மணிமாறன் விஜிஎல்யுஜி (VGLUG) அமைப்பாளர் "தமிழ் வலைத்தள உருவாக்கப் பயிற்சி" என்னும் பொருண்மையில் பயிற்சி வழங்கினார். வலைத்தள உருவாக்கத்தின் அவசியம், பயன்பாடு குறித்து விளக்கினார். வேர்ட்பிரஸ் மென்பொருள் கொண்டு வலைத்தள உருவாக்கம் பற்றி மாணவர்களுக்கு மெய்நிகர் வகுப்பினைப் பயன்படுத்தி இணையப் பயிற்சி வழங்கினார். இணையப் பயன்பாடு, காலத்தேவை, இளம் தலைமுறையினரின் பாதுகாப்பு, விழிப்புணர்வு குறித்த புரிதலை இப்பயிலரங்கம் உருவாக்கியது. மேலும் வலைத்தள உருவாக்கத்தை அறிந்துகொள்ளவும் மாணவர்கள் தங்களுக்கென வலைத்தளத்தை வடிவமைத்துக் கொள்வதற்கான பயிற்சியும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வு மாணவர்களுக்குப் பெரிதும் பயனுள்ளதாக அமைந்தது.
நிகழ்வு(1) தொடர்பான புகைப்படங்கள்
4.காந்தள் தமிழ் மன்றம் – உள் அகதர (IQAC) மதிப்பீட்டுக் குழு இணைந்து நடத்திய ஒருநாள் பயிலரங்கம் நாள்: 07.03.2023
நமது கல்லூரி தமிழ்த்துறை (சுழற்சி – 1) மற்றும் IQAC இணைந்து நடத்திய ஒருநாள் பயிலரங்கம் 07.03.2023 அன்று “சமகாலப் பெண்படைப்புகள்” என்னும் தலைப்பில் சிறப்பான முறையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கவிஞர் இளம்பிறை மற்றும் முனைவர் பா.இரவிக்குமார் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். அமர்வு 1: “வலிகளை வரலாறாக்குவோம்”என்னும் தலைப்பில் கவிஞர் இளம்பிறை அவர்கள் சிறப்புரையை வழங்கினார். தன் கவிதைகளின் வழியே பெண்களின் வாழ்வியல் யதார்த்தத்தை மாணவர்களிடம் இலகுவாகக் கொண்டு சேர்த்தார். மேலும் மாணவர்களைக் கவிதை எழுத ஊக்கப்படுத்தும் முயற்சியையும் மேற்கொண்டார். அமர்வு 2 : “சமகால இலக்கியங்களில் பெண் படைப்புகள்” என்னும் தலைப்பில் முனைவர் பா.இரவிக்குமார் அவர்கள் சிறப்புரையை வழங்கினார். பெண்களின் பங்களிப்பு படைப்புகள் வழியே வெளிப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார். நவீனப் படைப்புகளைச் சான்றுகளுடன் எடுத்துக்காட்டி பெண் சுதந்திரத்தின் தடை கற்களைப் படி கற்களாக மாற்றும் வழிமுறைகளை மாணவர்களுக்குச் சுட்டிக் காட்டினார். தமிழ்மொழியின் காலம், மொழியின் சிறப்புகள், சமூகப் பயன்பாட்டில் மொழி போன்ற கருத்தாடல்கள்களை முன்வைத்து சிறப்பு விருந்தினர்களின் உரை அமைந்திருந்தன.
நிகழ்வு(4) தொடர்பான புகைப்படங்கள்
5.காந்தள் தமிழ் மன்றம் - நிறைவுவிழா நாள்: 06.04.2023
நமது கல்லூரி, தமிழ்த்துறை (சுழற்சி-1) சார்பில் காந்தள் தமிழ் மன்ற நிறைவு விழா 06.04.2023 அன்று நடைபெற்றது. விழாவின் சிறப்பு விருந்தினர் சென்னை, பெரும்பாக்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உதவிப்பேராசிரியர், கவிஞர் இரா. பச்சியப்பன் அவர்கள், "வாழ்வியல் பேசும் கவிதைகள்" என்னும் பொருண்மையில் சிறப்புரையாற்றினார். தமிழ் இலக்கியத்தின் ஆகச் சிறந்த படைப்பாளர்களான மு.மேத்தா, மீரா, வாலி, இன்குலாப், அப்துல் ரகுமான், ஈரோடு தமிழன்பன் உள்ளிட்ட கவிஞர்களின் படைப்புகளில் நிறைந்திருக்கும் வாழ்வியலை அடையாளப்படுத்தினார். கவிதை அழகியல் நிறைந்த படைப்பு. மனித வாழ்வை அழகாகவும் அர்த்தமுள்ளதாகவும் மாற்றுபவை கவிதைகள். அவ்வமயம் அழகியலைக் கடந்த வாழ்வியல் கவிதைகளே மனித உணர்வுகளை முழுமையாக அறிந்து கொள்ள உதவுகின்றன என்னும் கருப்பொருளை பல்வேறு படைப்பாளர்களின் பன்முகப் படைப்புகளை எடுத்தாண்டு மாணவர்களுக்கு விளக்கினார். ஜவ்வாது மலைத்தொடரில் தம்முடைய படைப்புகள் உருவாகின, கவிதை மீதான ஆர்வமே தன்னைக் கல்வி கற்கத் தூண்டியது என்று யதார்த்தமான நடையில் உரையாற்றி மாணவர்களிடையே கவிதை மீதான ஆர்வத்தைத் தூண்டினார். தொடர்ந்து இக்கல்வியாண்டில்(2022-23) சிறப்பாகச் செயல்பட்ட மாணவர்களுக்கும் கவிதை, பேச்சு, ஓவியம், கட்டுரை, பாட்டுப் போட்டிகளில் பரிசு பெற்ற மாணவர்களுக்கும் பரிசினை வழங்கினார்.
நிகழ்வு(5) தொடர்பான புகைப்படங்கள்
1.காந்தள் - தமிழ் மன்றத் தொடக்க விழா மற்றும் பாரதி விழா நாள்: 11.09.2021
நமது கல்லூரி தமிழ்த்துறை (சுழற்சி – 1) சார்பில் 12.09.2021 அன்று காந்தள் தமிழ்மன்றத் தொடக்கவிழா மற்றும் பாரதி நூற்றாண்டு நினைவுநாள் விழா கொண்டாடப்பட்டன. திருச்சி, உருமு தனலட்சுமி கல்லூரி தமிழாய்வுத்துறைத் தலைவர், முனைவர் விஜயசுந்தரி அவர்கள் கலந்துகொண்டு சிறப்பு உரையாற்றினார். தமிழ்மொழியின் தொன்மை, சிறப்புகள்,சமூக பயன்பாட்டில் மொழி பெறும் இடம் முதலான கருத்தாடல்கள்களை முன்வைத்து சிறப்பு விருந்தினரின் உரை அமைந்திருந்தது. பாரதியின் நூற்றாண்டு நினைவு நாளை போற்றும் விதமாகப் பாரதியின் வாழ்க்கை வரலாற்றை அவரது படைப்புகளின் வாயிலாக எடுத்துரைத்து விளக்கினார். மேலும் தமது இசையறிவின் மூலம் பாரதி பாடல்களைப் பாடியும் இன்றைய இளந்தலைமுறை மாணவர்களிடம் பாரதியை இலகுவாகக் கொண்டு சேர்த்தார்.
நிகழ்வு(1) தொடர்பான புகைப்படங்கள்
2.'கணித்தமிழ்ப் பேரவைத் தொடக்கவிழா மற்றும் உலக மொழிபெயர்ப்பு நாள் விழா' நாள்: 30.09.2021
தருமமூர்த்தி இராவ் பகதூர் கலவல கண்ணன் செட்டி இந்துக் கல்லூரித் தமிழ்த் துறை தமிழ் இணையக் கல்விக்கழகத்துடன் இணைந்து, கணினித்தமிழ் வளர்க்கும் நோக்கில் இணைய வழியில் 30.09.2021 அன்று கணித் தமிழ்ப் பேரவையைத் தொடங்கியது. தொடக்க விழாவுடன் உலக மொழிபெயர்ப்பு நாள் விழாவும் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் க.கல்விக்கரசி அவர்கள், தலைமையுரை ஆற்றினார். உலக மொழிபெயர்ப்பு நாள் விழாவின் சிறப்பு விருந்தினராக, சாகித்திய அகாதெமி விருதாளர், கே.வீ. ஜெயஸ்ரீ அவர்கள் இணையம் வழியாக விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இவர் தமது உரையில் வாசிப்புக் கலையின் அவசியத்தையும் மொழிபெயர்ப்பில் ஏற்படும் சவால்களையும், தமிழ், மலையாள மொழிகளின் சிறப்புகளையும் மொழிபெயர்ப்பு நாள் கொண்டாடப்படுவதன் நோக்கத்தையும் சிறப்புற விளக்கினார்.
நிகழ்வு(2) தொடர்பான புகைப்படங்கள்
3.கணித்தமிழ் பேரவை - பயிலரங்கம் நாள்: 13.05.2022
தமிழ் மொழியில் இணையத்தைப் பயன்படுத்தும் ஆர்வத்தை மாணவர்களிடையே வளர்க்கும் நோக்கில் நமது கல்லூரியின் தமிழ்த் துறை (சுழற்சி-1) தமிழ் இணையக் கல்விக்கழகத்துடன் இணைந்து கணித்தமிழ்ப் பேரவை - பயிலரங்கினை 13.05.2022 அன்று கல்லூரி வளாகத்தில் நடத்தியது. தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஆய்வு வளமையர்களான திரு மு.சு. அருண்குமார் மற்றும் திரு இரா.செந்தில் குமரன் இருவரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு மாணவர்களுக்குத் தமிழ் இணையப் பயிற்சியினை வழங்கினார்கள். பயிலரங்கப் பயிற்சியில் தமிழ் இணையதளங்கள் பற்றிய அறிமுகமும் கணினி வழி தமிழை அணுகும் முறைகள், பயன்பாடுகள் குறித்தும் விளக்கினர். இவர்களுடைய பயிற்சி மாணவர்களிடையே ஆர்வத்தை வளர்த்தது. கணித்தமிழ்ப் பேரவை சார்பாக 125 மாணவப் பேரவை உறுப்பினர்கள் பயிலரங்கப் பயிற்சி பெற்றனர்.
நிகழ்வு(2) தொடர்பான புகைப்படங்கள்
தமிழ்த்துறை நிகழ்வுகள் 2020 – 2021
சிற்றிலக்கியங்கள் - இணைய வினாடி வினா -1
நமது கல்லூரித் தமிழ் துறை (சுழற்சி-1) சார்பில் 5, 6 ஜூன், 2020 ஆகிய இரண்டு நாட்கள் தமிழ்ச் சிற்ைிலக்கியங்கள் என்னும் தறலப்பில் இறைய வினாடி வினா-1 நறைபபற்ைது. இவ் வினாடி வினாவில் தமிழக அளவில் பபராசிரியர்கள் ஆய்வு மாைவர்கள் 419 பபர் இறைய வழியாக விண்ைப்பித்தனர். விண்ைப்பித்தவர்களுள் வினாடி வினா பபாட்டியில் 393 பபர் பங்கு பபற்ைனர். 210 பபர் பபாட்டியில் பவற்ைி பபற்ைனர் பவற்ைி பபற்ைவர்களுக்கு இறையம் வாயிலாக சான்ைிதழ்களும் வழங்கப்பட்ைன
நிகழ்வு தொடர்பான புகைப்படங்கள்
சிற்றிலக்கியங்கள் - இணைய வினாடி வினா -2
தமிழ்ச் சிற்ைிலக்கியங்கள் என்னும் தறலப்பில் இறைய வினாடி வினா-2, 20 ஜூறல, 2020 அன்று நறைபபற்ைது .இவ் வினாடி வினாவில் தமிழக அளவில் பபராசிரியர்கள் ஆய்வு மாைவர்கள் 665 பபர் இறைய வழியாக விண்ைப்பித்தனர். விண்ைப்பித்தவர்களுள் 355 வினாடி வினா பபாட்டியில் பபர் பங்கு பபற்ைனர். 175 பபர் பபாட்டியில் பவற்ைி பபற்ைனர் பவற்ைி பபற்ைவர்களுக்கு இறையம் வாயிலாக சான்ைிதழ்கள் வழங்கப்பட்ைன.
தமிழ்த்துறை நிகழ்வுகள் - 2019-2020
1. காந்தள்-தமிழ்மன்றத் தொடக்க விழா நாள்:10-07-2019
தமிழ்த்துறை சார்பாக 10.07.2019 அன்று காந்தள் தமிழ் மன்றத் தொடக்க விழா நடைபெற்றது. நமது கல்லூரி முதல்வர் முனைவர் வ.இலட்சுமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பா.ஜெய்கணேஷ் அவர்கள் கலந்து கொண்டு இலக்கியத்தில் வாழ்வியல் சிந்தனைகள் எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
நிகழ்வு(1) தொடர்பான புகைப்படம்
பாரதிவிழா நாள்:12-09-2019
காந்தள் தமிழ் மன்றம் சார்பாக 12.09.2019 அன்று பாரதி விழா நடைபெற்றது. சாகித்ய அகாதமியின் தென்மண்டல இயக்குநர் (ஓய்வு) திரு.அ.சு.இளங்கோவன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பாரதியின் பன்முகப் பார்வை என்னும் பொருண்மையில் சிறப்புரை வழங்கினார். இவ்விழாவினை முன்னிட்டு அனைத்துத் துறை மாணவர்களுக்கிடையில் கவிதை, கட்டுரை, பேச்சு, பாட்டு, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குச் சிறப்பு விருந்தினர் பரிசுகளை வழங்கி வாழ்த்தினார். அதிக புள்ளிகளைப் பெற்ற வணிகவியல் துறை மாணவர்களுக்குச் சுழற்கேடயம் வழங்கப்பட்டது.
நிகழ்வு(2) தொடர்பான புகைப்படம்
திருப்பாவை நிறைவு விழா நாள்: 31-01-2020
காந்தள் தமிழ் மன்றம் சார்பாக 31.01.2020 அன்று திருப்பாவை நிறைவு விழா நடைபெற்றது. நமது கல்லூரி முதல்வர் முனைவர் வ.இலட்சுமி அவர்கள் விழாவிற்குத் தலைமை வகித்தார். இந்நிகழ்வில் இராணிமேரி கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் இர.சிவசக்தி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பாவைப் பாடல்களில் வாழ்வியல் என்னும் தலைப்பில் உரையாற்றினார். நிகழ்ச்சியின் நிறைவாகப் பாவை வழி பாட்டில் கலந்து கொண்ட மாணவர்களுக்குச் சிறப்பு விருந்தினர் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்.